120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765G உடன் ரியல்மி X50m 5G அறிமுகம்

0
143

ரியல்மி X50 தொடரில் X50m 5G என்ற ஸ்மாட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. இது 6.57 இன்ச் FHD+ (1080 × 2400 பிக்சல்கள்) LCD திரையை 90.4% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன், 120Hz ரெப்பிரேஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த கைபேசியில் 16MP+2MP முன்எதிர்கொள்ளும் டூயல் கேமரா பஞ்ச்ஹோலில் பொறுத்தப்பட்டுள்து.

ஆக்டா கோர் (1 x 2.4GHz + 1 x 2.2GHz + 6 x 1.8GHz Kryo 475 CPU கள்) ஸ்னாப்டிராகன் 765G 7nm EUV மொபைல் இயங்குதளத்தில் அட்ரினோ 620 GPU உடன் ரியல்ம் UI ஆண்ட்ராய்டு 10-இல் இயக்கப்படுகிறது. பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன அவற்றுள் 48MP பிரதான கேமரா, 8MP இரண்டாம்நிலை 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மூன்றாம்நிலை 4cm மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP நான்காம்நிலை ஆழ சென்சார் உள்ளது. இது 163.8 × 75.8 × 8.9 மில்லிமீட்டர் அளவு மற்றும் 194 கிராம் எடையைக் கொண்டதாகும். 5G SA / NSA, 4G வோல்ட்இ ,NFC, USB Type-C, மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்,30W டார்ட் சார்ஜ் கொண்ட 4200mAh பேட்டரி கொண்டுள்ளது.

ரியல்மி X50m 5G ப்ளூ அண்ட் வைட் வண்ணங்களில் வருகிறது.6GB RAM/128GB ROM விலை 1999RMB (இந்திய மதிப்பிற்கு ரூ. 21,480 தோராயமாக) மற்றும் 8GB RAM/128GB ROM விலை 2299RMB (இந்திய மதிப்பிற்கு ரூ. 24,700 தோராயமாக). இந்த கைலைபேசி ஏப்ரல் 29 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.