சமீபத்தில் ஒன்பிளஸ் 8 pro மற்றும் ஒன்பிளஸ் 8 என்ற புதிய ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் விற்பனை செய்துள்ளது. ஒன்ப்ளஸ் 8 pro வாங்கிய சிலர் தங்களது டிஸ்பிளேவில் சில பிரச்சனைகளை கண்டுள்ளனர்.அதாவது ‘க்ரீன் டின்ட்’ மற்றும் ‘பிளாக் க்ரஷ்’ டிஸ்பிளேயில் தெரிகிறது என புகாரளிக்கின்றனர்.
மேலும் இந்த ‘க்ரீன் டின்ட்’ பிரச்சனை பற்றி கூறுகையில் குறைந்த டிஸ்பிளே பிரைட்னஸ் அமைப்புகளில் நிகழ்கிறது மற்றும் ‘பிளாக் க்ரஷ்’ சிக்கலையும் உருவாக்குகிறது.மேலும் ‘பிளாக் க்ரஷ்’ சிக்கலில் மாட்டும் ஒரு போட்டோவின் இருண்ட பகுதிகள் பிக்சலேட் அல்லது தானியமாக தோன்றும்.
இது பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் கூறுவது:
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை அடையாளம் காண எங்கள் குழு தற்போது இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது, மேலும் அவை தயாரானவுடன் அப்டேட் மூலம் வெளியிடுவோம்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ 6.78 அங்குல கியூஎச்.டி 120 ஹெர்ட்ஸ் எச்டிஆர்10+ டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது டிஸ்பிலே மேட்டின் A+ உயர்தர மதிப்பீட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிஸ்ப்ளேமேட்டின் பகுப்பாய்வின்படி, ஒன்பிளஸ் 8 ப்ரோ டிஸ்ப்ளே 10 சிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே செயல்திறன் பதிவுகளில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது, இதில் வண்ண துல்லியம், பட மாறுபாடு, காட்சி பிரகாசம் மற்றும் திரை பிரதிபலிப்பு ஆகியவை அடங்கும்.