ரியல்மி-இன் புதிய Narzo 10 மற்றும் Narzo 10A ஸ்மார்ட்போன்கள் மே 11 ஆம் தேதி இந்தியாவில் ஒரு ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ரியல்மி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இது பிளிப்கார்ட் வெப்சைட் மூலம் வாங்கி கொள்ளலாம்.
முன்பு மியன்மாரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 6i இன் மறுபெயர்தான் Narzo 10-ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிது மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி c3 இன் மறுபெயர்தான் Narzo 10A-ஆக அறிமுகம் செய்யப்படுகிது. இது கடந்த மாதம் இந்தியாவில் இரட்டை கேமராக்களுக்கு பதிலாக மூன்று பின்புற கேமராக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விரிவான விரவாரக்குறிப்புகள் பின்வருவன.
ரியல்மி Narzo 10 விரவாரக்குறிப்புகள்
- 6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ 20: 9 மினி-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்புடன்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 12nm processor ( 2GHz கார்டெக்ஸ்-A75 + ஹெக்சா 1.8GHz 6x கார்டெக்ஸ்-A55 CPU-க்கள்), ARM Mali-52 2EEMC2 ஜி.பீ.யு
- 3GB LPDDR4x RAM, 64GB eMMC 5.1 ஸ்டோரேஜ் மற்றும் 4GB LPDDR4x RAM, 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ், மைக்ரோ sd உடன் 256GB வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி)
- ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI
- 48MP f /1.8 கேமரா, LED, 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங், 8MP 119° அல்ட்ரா-வைட் சென்சார், 2MP 4cm f/2.4 மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார்
- பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- 16MP f/2.0 முன் எதிர்கொள்ளும் கேமரா
- பரிமாணங்கள்: 164.4 x 75.x 9.0mm; எடை: 195 கிராம்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- இரட்டை 4 ஜி வோல்ட்இ, wifi 802.11 b/g/n, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, USB Type-C
- 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங்
ரியல்மி Narzo 10A விரவாரக்குறிப்புகள்
- 6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ 20: 9 மினி-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்புடன்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G70 12nm CPU (இரட்டை 2GHz கார்டெக்ஸ்-A75 + ஹெக்ஸா 1.7GHz 6x கார்டெக்ஸ்- A55 CPU கள்), ARM Mali- G52 2EEMC2 GPU
- 3GB LPDDR4x RAM, 32GB eMMC 5.1 ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ sd உடன் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
- இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி)
- ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI
- 12MP f /1.8 பின்புற கேமரா, LED ஃபிளாஷ், 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங், 2MP 4cm f/2.4 மேக்ரோ, 2MP டெப்த் சென்சார்
- 5MP முன் எதிர்கொள்ளும் கேமரா
- பரிமாணங்கள்: 164.4x75x8.95mm; எடை: 195 கிராம்
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
- ஸ்பிளாஸ் ப்ரூப்
- இரட்டை 4 ஜி வோல்ட்இ, wifi 802.11 பி / ஜி / என், புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, micro USB
- 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங்
ரியல்மி Narzo 10 பால் வெள்ளை மற்றும் கிரீன் டீ வண்ணங்களில் வரும் என்றும் ரியல்மி Narzo 10 உறைந்த நீலம் மற்றும் எரியும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.