ஹீலியோ ஜி80, 48MP குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி Narzo 10 இந்தியாவில் வெளியீடு

0
138

ரியல்மி Narzo 10A தெடர்ந்து ரியல்மி Narzo 10ஐ அறிமுகப்படுத்தியது. இது நிறுவனத்தின் புதிய நார்சோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.5 இன்ச் எச்டி + மினி-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை 89.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது, இது சமீபத்திய மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm processor மூலம் இயக்கப்படுகிறது.இந்த போனில் ரிவர்ஸ் சார்ஜிங், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 18w ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் ஜப்பானிய வடிவமைப்பாளர் நயோடோ பியூகாசவால் உருவாக்கப்பட்ட சாய்வு வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்ப்ரே பெயிண்டிங் செயல்முறையைப் பயன்படுத்துகிறது.

ரியல்மி Narzo 10 விரவாரக்குறிப்புகள்

  • 6.5-இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) HD+ 20: 9 மினி-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்புடன்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 12nm processor ( 2GHz கார்டெக்ஸ்-A75 + ஹெக்சா 1.8GHz 6x கார்டெக்ஸ்-A55 CPU-க்கள்), ARM Mali-52 2EEMC2 ஜி.பீ.யு
  • 4GB LPDDR4x RAM, 128GB eMMC 5.1 ஸ்டோரேஜ், மைக்ரோ sd உடன் 256GB வரை விரிவாக்கக்கூடிய திறன் உடையது
  • இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி)
  • ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI
  • 48MP f /1.8 கேமரா, LED, 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங், 8MP 119° அல்ட்ரா-வைட் சென்சார், 2MP 4cm f/2.4 மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார்
    பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
  • 16MP f/2.0 முன் எதிர்கொள்ளும் கேமரா
    பரிமாணங்கள்: 164.4 x 75.x 9.0mm; எடை: 195 கிராம்
  • 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • இரட்டை 4 ஜி வோல்ட்இ, wifi 802.11 b/g/n, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, USB Type-C
  • 5000mAh பேட்டரி, 18W சார்ஜிங்

ரியல்மி Narzo 10 என்ற வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 11,999 மற்றும் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் மே 18 முதல் கிடைக்கும்.