108MP கேமரா கொண்ட சியோமி Mi CC10 Pro விரைவில் அறிமுகம்?

0
113

சியோமி கடந்த ஆண்டு நவம்பரில் 108MP பென்டா பின்புற கேமராக்களுடன் Mi CC9 Pro-வை அறிமுகப்படுத்தியது. இது உலக சந்தைக்கு Mi Note 10 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது 108MP கேமரா கொண்ட சியோமி Mi CC10 Pro அறிமுகம் செய்யவுள்ளது.

Mi CC9 Pro / Mi Note 10 சாம்சங் HMX சென்சாருடன் வருகிறது மேலும் இது சாம்சங்கின் 108MP சென்சாரைப் பயன்படுத்திய முதல் போன் ஆகும். இது 12x ஆப்டிகல் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Mi CC9 Pro / Mi Note 10 மற்றும் சமீபத்திய Mi 10 Lite Zoom Edition 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 50x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 108MP கேமரா உடன் வர வாய்ப்புள்ளது.

5G ஆதரவுடன் வரவிருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 775G மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இந்த போன் இயக்கப்படும் என்றும் ஜூலை மாதம் எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் வாரங்களில் கூடுதல் விவரங்களை நாம் தெரிந்து கொள்ளளாம்.