ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் 10.1 இன்ச் Surface Go 2-இன்-1 ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியது. அதற்குப் பின்பு Surface Book 3, Surface Headphones 2 மற்றும் Surface Earbuds ஆகியவற்றுடன் Surface Go 2 லேப்டாப்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் இது Surface பேனாவுடன் வருகிறது மற்றும் பயனர்கள் பிளாட்டினம், பிளாக், பாப்பி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் வருகின்றது.இது மே 12, 2020 முதல் கிடைக்கும் மற்றும் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.Surface Go 2- ன் விலை 399 அமெரிக்க டாலர் (ரூ. 30,341 தோராயமாக) முதல் 879 அமெரிக்க டாலர் (ரூ. 66,841 தோராயமாக) வரை இருக்கும். மேலும் Surface Go 2 வகை கவர்கள் 99 அமெரிக்க டாலர் (ரூ. 7528 தோராயமாக) தொடங்குகிறது.
மைக்ரோசாப்ட் Surface Go 2 விவரகுறிப்புகள் பின்வருவன
- 10.5-இன்ச் (1920 x 1280) 10-பாய்ண்ட் மல்டி-டச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன்
- இன்டெல் பென்டியம் கோல்டு processor 4425Y / 8 வது ஜெனரல் இன்டெல் கோர் மீ 3 processor உடன் இன்டெல் UHD கிராபிக்ஸ் 615
- 64GB சேமிப்பகத்துடன் 4GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்துடன் 8GB RAM
- 8MP பின்புற கேமரா 1080p வீடியோ பதிவுடன்
- 5MP முன்னெதிர்கொள்ளும் கேமரா 1080p வீடியோ பதிவுடன்
- USB Type-C,Surface Connect, Surface Type Cover போர்ட் , MicroSDXC கார்டு ரீடர் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக்
- WiFi 6, புளூடூத் 5.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் X16 LTE மோடம்
- 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி ஆடியோ பிரீமியமுடன்; இரண்டு மைக்ரோஃபோன்கள்,24W பவர் சப்ளை
- பரிமாணங்கள்: 245 x 175 x 8.3 மிமீ; எடை: 533 கிராம் (LTE மாடல்) / 544 கிராம் (WiFiமாடல்)
- விண்டோஸ் 10 ஹோம் இன் எஸ் பயன்முறையில் (நுகர்வோர் சேனல்) / விண்டோஸ் 10 ப்ரோ (வணிக சேனல்கள்)